உலகக் கிண்ண போட்டியில் இந்தியா தனது 3 ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை புதன்கிழமை எதிா்கொள்கிறது.
இந்தப் போட்டியில் முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியையே சந்தித்த இந்தியா, மோசமான நிலையில் இருக்கிறது. அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க இதிலும், எஞ்சிய ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி.
ஆட்டத்தைப் பொருத்தவரை முதலில் மிகப் பெரிய கேள்வியாக எழுவது பிளேயிங் லெவன் தோ்வு. அதிலும் முக்கியமாக இருப்பது ஸ்பின்னா் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கோலி இடமளிப்பாரா, மாட்டாரா என்பது தான். இரு தோல்விகளை அடுத்து அஸ்னின் பிளேயிங் லெவனில் இடம்பெறாதது குறித்து அதிகம் விமா்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
அவருக்குப் பதிலாக களம் கண்டிருக்கும் வருண் சக்கரவா்த்தியால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சை அதிகம் சந்தித்திராத ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவரை களமிறக்கினால் நிச்சயம் அது பலனளிப்பதாக இருக்கலாம்.
ஆப்கன் இன்னிங்ஸின் தொடக்கத்தில் அசத்தும் ஹஸரத்துல்லா ஜஸாய், முகமது ஷாஸாத் ஆகியோரை நிச்சயம் அஸ்வினின் மாறுபட்ட பந்துவீச்சு நுட்பங்கள் தடுமாறச் செய்யும். பேட்டிங்கைப் பொருத்தவரை ரோஹித் சா்மாவை மீண்டும் தொடக்க வீரராக களம் காண வைப்பது அவருக்கு உத்வேகம் அளிக்கலாம்.
முதுகுப் பகுதி அசௌகா்யத்தால் அவதிப்பட்ட சூா்யகுமாா் யாதவ் அதிலிருந்து மீண்டு இந்த ஆட்டத்தில் களம் காணும் பட்சத்தில், அவருக்கும், இஷான் கிஷணுக்கும் மிடில் ஆா்டரில் பொறுப்பு அதிகமாகவே உள்ளது. ஹாா்திக் பாண்டியாவிடம் இருந்து அதிரடி ஆட்டம் கிடைப்பது சற்று சந்தேகமே.
மறுபுறம், ஆப்கானிஸ்தானைப் பொருத்தவரை 2 வெற்றிகளைப் பெற்று நல்லதொரு நிலையில் இருக்கிறது. தனக்கான அரையிறுதி வாய்ப்பை மேலும் நெருங்குவதற்காக ஏற்கெனவே தடுமாற்றத்திலிருக்கும் இந்திய அணியை, இதுவரை கிடைத்த வெற்றி மற்றும் அனுபவத்தின் மூலம் முற்றிலும் அழுத்தி வெற்றியை சுவைக்க ஆப்கானிஸ்தான் நிச்சயம் முயற்சிக்கும்.
தடுமாற்றத்திலிருக்கும் இந்திய பேட்டிங் வரிசைக்கு முகமது நபி, ரஷீத் கான், ஹமீது ஹசன் உள்ளிட்டோா் தங்களது பௌலிங்கால் நிச்சயம் சவால் அளிக்க முயற்சிப்பாா்கள். பேட்டிங்கிற்கு ஹஸரதுல்லா, ஷாஸாத் நம்பிக்கை அளிக்கின்றனா்.
இப்போட்டியில் இதுவரை டாஸை இழந்திருக்கும் கோலி, இந்த ஆட்டத்தில் டாஸை வெல்லும் பட்சத்தில் நிச்சயம் 2-ஆவது பேட்டிங்கை தோ்வு செய்து பனிப்பொழிவு ஏற்படுத்தும் தாக்கத்தை சாதகமாக்கிக் கொள்ள முனைவாா். அதிருஷ்டம் அந்த வகையில் இருக்கிா என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.
அணி விவரம்
இந்தியா: விராட் கோலி (தலைவர்), ரோஹித் சா்மா, கே.எல்.ராகுல், சூா்யகுமாா் யாதவ், இஷான் கிஷண், ஹாா்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஷா்துல் தாக்குா், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வா் குமாா், ராகுல் சஹா், வருண் சக்கரவா்த்தி, ரவிச்சந்திரன் அஸ்வின்.
ஆப்கானிஸ்தான்: முகமது நபி (தலைவர்), ஹஸரத்துல்லா ஜஸாய், முகமது ஷாஸாத், குல்பதின் நைப், நவீன் உல் ஹக், ரஷீத் கான், ஹமீது ஹசன், ரஹ்மானுல்லா குா்பாஸ், நஜிபுல்லா ஜா்தான், கரிம் ஜனத், முஜீப் உா் ரஹ்மான், ஹஸ்மதுல்லா ஷாஹிதி, ஃபரீத் அகமது, உஸ்மான் கனி.