சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
இதில், பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 2 வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மார்க்ராம் 3 வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
இந்திய தலைவர் விராட் கோலி 8 வது இடத்துக்கு பின்தங்கினார். மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் ராகுல் 5 வது இடத்துக்கு முன்னேறினார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 6 இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். முதலிடத்தில் இலங்கையின் ஹசரங்கா, 2 வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி, 3 வது இடத்தில் இங்கிலாந்தின் அடில் ரஷித் நீடிக்கின்றனர்.
ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்திலும், வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.