தமிழ் ரசிகர்களிடம் முக்கிய இடம் பிடித்திருப்பவர் ஹன்சிகா. அவர் தனது அனுபவங்களை பகிரிந்து கொள்கிறார்…
தமிழ் ரசிகர்கள் என் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள். நான் இப்போது தமிழ் பேச வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன். வணக்கம், நன்றி என்பது போன்ற ஒரு சில வார்த்தைகளை பேசுகிறேன். யாராவது தமிழில் பேசினால் ஓரளவு புரியும். நான் அரண்மனை–2ல் திரிஷாவுடன் நடிக்கிறேன். புலியில் சுருதிஹாசனுடன் நடித்திருக்கிறேன். நல்ல பாத்திரம் என்றால் யாருடனும் சேர்ந்து நடிப்பேன். என்னை சின்ன குஷ்பு என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த குஷ்பு மேடம் போல ரசிகர்கள் என்னையும் நினைப்பது சந்தோஷமான விஷயம். இப்படி அழைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
புலி படத்தில் ஸ்ரீதேவி, சுருதிஹாசனுடன் நடித்தது புதிய அனுபவம். அவர்கள் என்னிடம் அன்பாக பழகினார்கள். விஜய் மற்றவர்களுக்கு உதவும் பண்பு கொண்டவர். அவருடைய குணம் எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் நன்றாக நடனம் ஆடுவார். அவருடன் ஆடுவது சிரமம். புலி படத்தில் விதவிதமான நகைகள் அணிந்து ராணி வேடத்தில் நடித்திருக்கிறேன். இதற்கு மேக்கப் போட பல மணி நேரம் ஆனது. சில வசனங்களை மனப்பாடம் செய்து பேசினேன்.
ரஜினியுடன் நடிப்பீர்களா? என்று கேட்கிறார்கள். எனக்கும் நடிக்க ஆசை இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். ரசிகர்கள் விரும்பும் எந்த வேடத்திலும் நடிப்பேன்.