2021 ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவின் ஹர்னாஸ் கவுர் சாந்து வென்றார்.
70 ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா, பராகுவே உள்ளிட்ட 80 நாடுகளைச் சேர்ந்த போட்டியர்களை வீழத்தி பஞ்சாபைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.
ஹர்னாஸ் கவுருக்கு முன்னாள் மிஸ் யுனிவர்ஸான மெக்சிகோவின் ஆண்ட்ரியா பட்டம் சூட்டினார்.
முன்னதாக லாரா தத்தா 2000 இல் வாகை சூடிய நிலையில் 20 ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் ஹர்னாஸுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.