பிரபல பாகிஸ்தான் வீரரான முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
41 வயது ஹபீஸ், பாகிஸ்தான் அணிக்காக 2003 முதல் விளையாடி வருகிறார். 55 டெஸ்டுகள், 218 ஒருநாள், 119 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். டெஸ்டில் 10 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 11 சதங்களும் எடுத்துள்ளார்.
டி20 உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்றில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய ஹபீஸ், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார். டெஸ்டில் இருந்து டிசம்பர் 2018 இல் ஓய்வு பெற்ற ஹபீஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் 2019 உலகக் கிண்ணத்திற்கு பிறகு தேர்வாகவில்லை.
ஆட்ட நாயகன் விருதை 32 முறை பெற்றுள்ளார். பாகிஸ்தான் டி20 அணியின் தலைவராகவும் செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் டி20 லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளார்.