‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் மூன்றாவது பாடலான ‘நான் பிழை’ நேற்று (ஜன.3) மாலை 6 மணியளவில் வெளியானது.
பாடல் வெளியான சில மணிநேரங்களில் யூடியூபில் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
நானும் ரௌடி தான் படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி, நயன்தாரா, அனிருத் ஆகியோர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்திருக்கும் படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.
இந்தக் கூட்டணியுடன் சமந்தாவும் இணைந்துள்ளார். ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்துல் ஏற்கெனவே ‘ரெண்டு காதல்’, ‘டூ டு டூ’ ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து ‘நான் பிழை’ என்ற மூன்றாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் மீண்டும் ஒரு மெலோடியாக உருவாகியுள்ள இந்த பாடலுக்கு விக்னேஷ் சிவன் வரிகள் எழுத, ரவி, ஷாஷா திரிபாதி ஆகியோர் பாடியுள்ளனர்.