கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் நேற்று 58,097 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 90,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 325 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 482,876 ஆக அதிகரித்துள்ளது.
ஒரு நாளில் 19,206 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 285,401 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 148.67 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.