இன்று (08) காலை பத்தரமுல்லை சந்திக்கு அருகில் முச்சக்கர வண்டியுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. முச்சக்கரவண்டி கார் ஒன்றுடன் மோதி அருகில் இருந்த கடையுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த இரு பெண்களும் முச்சக்கரவண்டியின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காரின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website