ரயில் பாதையின் மீது அவசரமாக தரையிறக்கப்பட்ட இலகுரக விமானம் ஒன்றின் மீது கடுகதி ரயில் ஒன்று மோதும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
இந்த விபத்து அமெரிக்காவின், லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இலகுரக விமானம் மீது ரயில் மோதுவதற்கு முன்னதாகவே பொலிஸார் விமானியை காப்பாற்றியுள்ளனர்.