தனுஷ்-அனிருத் கூட்டணி என்றாலே ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் கொலைவெறி பாடல் கிட்டத்தட்ட 10 கோடி பார்வையாளர்களை நெருங்கவிருக்கின்றது.
இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த மற்றொரு பாடல் ஒன்று மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. அவை வேறு ஏதும் இல்லை, மாரி படத்தில் இடம்பெற்ற ‘டானு டானு’ என்ற பாடல் தான்.
இப்பாடல் தற்போது 1 கோடி பார்வையாளர்களை தாண்டியுள்ளது. சமீபத்தில் தான் ‘மெர்சலாயிட்டேன்’, ‘ஏக் தோ தீன்’ பாடல்கள் 1 கோடி பார்வையாளர்களை தாண்டியது குறிப்பிடத்தக்கது.