நாம் அன்பைக் காண்பித்தால், நம்மை விட நான்கு மடங்கு அதிகபட்சமாகவே அன்பைக் காண்பிக்கும் நாய்கள். பிரேசிலில் ஒரு நாய் தனது நண்பனான சிறுவனுடன், தானும் சிறு குழந்தையாகவே மாறிவிட்டது.
பிரேசில் தெருவில் சிறுவர்களுடன் சேர்ந்து ஸ்கிப்பிங் விளையாடுகிறது இந்த நாய்(ஸ்கிப்பி). ஸ்கிப்பிங் கயிறைத் தாண்டி எகிறி குதிப்பது நாய்க்கு சுலபமானது என எண்ணுகின்றீர்களா? இந்த நாய் கயிறை தனது வாயால் கவ்வி நண்பர்களைக் குதிக்க வைக்கிறது.
விரைவில் இந்த புத்திசாலி நாய் பிரேசிலின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பங்கேற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! புத்திசாலியான, அன்பான நாய்களை யாருக்குத்தான் பிடிக்காது. ஸ்கிப்பியின் வீடியோ இணைப்பு உங்களுக்காக..