அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட் லேண்ட் பகுதியை சேர்ந்தவன் ரிச்சர்ட் டீன் டெபியூடிஸ் (35). கொள்ளையன். சம்பவத்தன்று இரவு போர்ட் லேண்டில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தான்.
வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் நகைகளை கொள்ளையடித்தான். கொள்ளையடித்த பின் வீட்டில் இருப்பவர்களிடம் செக்ஸ்சில் ஈடுபடுவது இவன் வழக்கம். எனவே, அங்கு வீட்டு உரிமையாளர்களின் படுக்கை அறைக்குள் நுழைந்தான். அங்கு உரிமையாளர்கள் படுக்கையில் தூங்கி கொண்டிருந்தனர்.
உடனே, தனது பேண்ட் மற்றும் சட்டையை கழற்றி விட்டு நிர்வாணமாக அவர்களுடன் படுத்து ‘செக்ஸ்’ சில்மிஷத்தில் ஈடுபட்டான். அப்போது வீட்டு உரிமையாளர்களின் கன்னத்தில் அன்பு முத்தமிட்டான். இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த நபர் ஆத்திரத்தில் எரிச்சலடைந்து கூச்சலிட்டார். தனது துப்பாக்கியால் கொள்ளையன் ரிச்சர்ட்டை 3 தடவை சுட்டார்.
ஆனால் குறி தவறி விட்டது. இதற்கிடையே நிர்வாணமாக இருந்த கொள்ளையன் ரிச்சர்ட் தனது பேண்ட்– சட்டையை மாட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். ஆனால் மற்றொரு வீட்டில் கொள்ளையடித்த போது அவன் போலீசாரிடம் சிக்கி கொண்டான். அவனை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.