பிரபல கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “ஐராவத்“ என்ற கன்னட படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் இவர் பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல் வீட்டில் உள்ள படுக்கையில் இருந்து எழுந்து வெளியே வந்தார். அப்போது அவர் திடீரென கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் அவரது இடது கை மூட்டு எழும்பில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் உடனடியாக அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் அளவுக்கு பெரிய காயம் இல்லாததால் அவரை டாக்டர்கள் உடனடியாக வீட்டிற்கு அனுப்பினர். ஆனால் 20 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அவருக்கு டாக்டர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இந்த தகவலை தர்ஷனின் தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் கூறினார்கள். ரசிகர்கள் யாரும் ஆதங்கப்பட வேண்டாம் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.