பொம்மைபோல இருக்கும் அரிய விலங்கான பாண்டாக்களை பராமரிப்பதுதான் உலகிலேயே மகிழ்ச்சியான வேலை என்கிறது ஐபாண்டா என்கிற யூடியூபின் பக்கம்.
இந்த பக்கத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சீனாவின் யான் நகர பைபென்ஜ்க்சியா பாண்டா பாதுகாப்பு தளத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சி இடம்பெற்றுள்ளது.
எல்லா நேரமும் பாண்டாக்களுடன் விளையாடிக்கொண்டிருப்பது மட்டுமே அவர்களது வேலையில்லை என்றாலும், இந்த வேலைதான் உலகிலேயே மகிழ்ச்சியளிக்கும் வேலையாக இங்கு பணிபுரிபவர்கள் கருதுகின்றனர்.
யூடியூபில் வெளியான இந்த வீடியோ இணைப்பை நீங்களும் கண்டு மகிழுங்கள்…