தெலுங்கு முன்னணி நாயகன் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புதிய படம் ‘சரைனொடு’
பொய்யப்பட்டி ஸ்ரீனு இயக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ரகுல் பிரீத்சிங், கேத்தின் தெரசா ஆகிய நாயகிகள் நடித்து வருகிறார்கள். தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் இடம் பெறும் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு நட்பின் அடிப்படையில் அனுஷ்கா நடனம் ஆடுகிறார் என்று முன்பு கூறப்பட்டது.
இப்போது இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் அஞ்சலி குத்தாட்டம் போடுகிறார் என்று உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அல்லு அர்ஜுனின் வேண்டுகோளை ஏற்று அஞ்சலி இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட சம்மதித்து இருக்கிறார்.