சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக விளங்கும் பேஸ்புக்கில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இணைந்துள்ளார்.
பேஸ்புக்கில் ஏற்கனவே ஜனாதிபதி ஒபாமாவின் பெயரில் உள்ள கணக்கு Organising for Action என்ற அரசியல் அமைப்பு நடத்துவதாகவே இருந்த நிலையில், President Obama என்ற பெயரில் ஜனாதிபதி ஒபாமா சொந்தமாக பேஸ்புக் பக்கம் துவங்கியுள்ளார்.
இந்த புதிய பேஸ்புக் பகத்தின் மூலமாக அமெரிக்க மக்களுடன் அவர் நேரடியாக உரையாடவுள்ளார். ஒபாமா பேஸ்புக்கில் சேர்ந்த சில மணி நேரத்திற்குள்ளாகவே, 2 லட்சத்து 80 ஆயிரம் பேர், அவரை பின் தொடர்ந்துள்ளார்கள்.
தனது முதல் பேஸ்புக் பதிவில், ஹலோ பேஸ்புக்! இறுதியாக, எனது பிரத்தியேகமான பக்கத்தை நான் உருவாக்கி விட்டேன். இதில், நம் நாடு சந்திக்கும் மோசமான பிரச்சனைகள் குறித்து நாம் நேரடியாக விவாதிக்கலாம் என்று நம்புகிறேன். என்று கூறி ஒரு வீடியோவையும் அப்லோட் செய்துள்ளார். அதில் காலநிலை மாற்றத்திற்காக குரல் கொடுத்துள்ளார்.