பனிக்கட்டி ஓட்டல், மணல் ஓட்டல், மொட்டைமாடி ஓட்டல், தண்ணீருக்கு அடியில் இயங்கும் ஓட்டல் என உலகில் விதவிதமான ஓட்டல்கள் செயல்படுகின்றன. பெல்ஜியத்தை சேர்ந்த 2 பேர், பளு தூக்கும் எந்திரமான கிரேனின் உச்சியில் 180 அடி உயரத்தில் ஒரு வினோத உணவகத்தை நிறுவி உள்ளனர்.
டேவிட் கைசெல்ஸ், ஸ்டீபன் கெர்கோப்ஸ் ஆகியோரின் கூட்டு முயற்சியால் கடந்த 2007-ம் ஆண்டு புரூசெல்ஸ் நகரில் இந்த ஓட்டல் தொடங்கப்பட்டது.
இங்கு வருபவர்கள் தரைத்தளத்தில் 300 டாலர் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொண்டால் அவர்கள் உணவு மேஜையில் அமர்ந்து பாதுகாப்பு பெல்ட் அணிந்தவுடன், ராட்டினத்தில் பயணித்ததுபோல உயரத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கே விதவிதமான உணவுகளை சுவைக்கலாம்.
இசைவிருந்தும் நடக்கும். ஒரு நாளைக்கு 22 பேருக்கு மட்டுமே அனுமதி.
மாலையில் மட்டுமே இந்த ஓட்டல் செயல்படும். இதே மாதிரியில் செயல்படும் ஆகாய ஓட்டல்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ், துபாய் ஆகிய இடங்களிலும் உள்ளன.