சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக 233-வது நாளைக் கடந்துள்ள அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி, தீபாவளியன்று அங்கிருந்து எடுத்து அனுப்பியுள்ள புகைப்படம் நாம் இந்திய வரைபடத்தில் மட்டுமே பார்த்த இந்தியாவின் எல்லைக்கோட்டை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
இன்று காலை 5.26 மணிக்கு ஸ்காட் தனது ட்விட்டரில் இந்த புகைப்படத்தை பதிவிட்டார். 10 ஆயிரம் லைக்குகளை கடந்து இந்தப் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.