புதிய ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரில் (Spectre) வரும் நீண்ட முத்தக் காட்சிகள் இந்தியாவில் உள்ளவர்களுக்கு பொருத்தமற்றவை என்று இந்தியாவின் திரைப்பட தணிக்கைக் குழு தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் வெள்ளியன்று திரையிடப்படவுள்ள இந்தப் படத்தில் இரண்டு இடங்களில் சில காட்சிகளை மத்திய திரைப்பட தணிக்கைக் குழு நீக்கியுள்ளது.
இந்தத் திரைப்படத்துக்கு அளிக்கப்பட்டுள்ள யூஏ (UA) சான்றிதழின் விதிமுறைகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
12 வயதுக்குட்பட்ட சிறார்கள் பெரியவர்களின் கண்காணிப்பில் பார்க்கக்கூடிய படங்களுக்கே இந்த யூஏ சான்றிதழ் அளிக்கப்படும்.
ஒரு சில செக்கண்டுகளே காட்சிகள் வெட்டப்பட்டுள்ளதாக இந்தப் படத்தை வெளியிடுகின்ற சோனி பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.