‘அபியும் நானும்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் சூப்பர் ஹிட்டான ‘தனி ஒருவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரும் சின்னத்திரை நடிகை நிஷாவும் காதலித்து வந்தார்கள். இரு வீட்டாரின் சம்மத்துடன் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் அரவிந்த்சாமி, சின்னத்திரை நடிகர் படவா கோபி, தொகுப்பாளர் மகேஷ், நீலிமா, இயக்குனர் ராதா மோகன், நடிகர் பாஸ்கி, தயாரிப்பாளர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இதற்கு முன்னதாக நேற்று முன்தினம் இவர்களின் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் நடிகர்கள் நாசர், ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், விக்ரம் பிரபு, சாந்தனு, விஜய் ஆண்டனி இயக்குனர்கள் தரணி, மோகன் ராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.