சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். இந்நிலையில் நன்றாக வளர்ந்து வரும் நிலையில் இவரின் ரஜினி முருகன் ரிலிஸ் ஆகாமல் இருந்தது ரசிகர்கள் மட்டுமின்றி அவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
செப்டம்பர் மாதத்திலிருந்து தேதி அறிவித்து தற்போது நவம்பர் வந்து விட்டது, படம் வந்த பாடில்லை.
டிசம்பர் 4ம் தேதி படம் வரும் என கூறப்பட்டது, பின் அதிலும் சிக்கல் படம் வராது என கூறிய நிலையில், சமீபத்தில் வந்த தகவலின்படி படம் சொன்ன தேதியில் வருமாம். இதை தயாரிப்பாளர் தரப்பே உறுதி செய்துள்ளது.