தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் யுவன் ஷங்கர் ராஜாவும் ஒருவர். தனக்கென்று ஒரு ஸ்டைல் பெரிய ரசிகர்கள் கூட்டம், தொடர் வெற்றியால் நம்பர் 1 இடத்தில் இருந்தார்.
ஆனால், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனையால் கொஞ்சம் கேப் விட்டார். இந்நிலையில் அடுத்த வருடம் யுவனுக்கு அதிர்ஷ்ட வருடமாம்.
தர்மதுரை, ஹாலிவுட் படம், தரமணி, தியாகராஜா குமாரராஜா படம், வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம், செல்வராகவன் இயக்கும் புதிய படம், அது மட்டுமின்றி பாலிவுட் இயக்குனர் அனுராக் இயக்கும் ஒரு படத்தில் இசையமைப்பாளராக யுவன் கமிட் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.