ஆண், என்றால் அவனிடம் சில தகுதிகள் இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். சம்பளம், வேலை, வாழ்விடம் போன்றவற்றை தவிர்த்து ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்பு பெண்களின் உள்ளது. அவை என்னவென்று பார்க்கலாம்.
• ஒருவரின் பொறுமை தான், அவருக்கான சமூக பெயரை நிலைநாட்டுகிறது. பொறுமையை இழக்கும் தருணத்தில் தான் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பெயரும், புகழும் வேறு ஒரு நபருக்கு கிடைக்கப் பெறுகிறது. எனவே, ஆண்களுக்கு பொறுமை மிகவும் அவசியம் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். •நகைச்சுவை குணமானது அனைவருக்கும் தேவையான ஒன்று. வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள். துன்பத்திலும் சிரிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சான்றோர் வாக்கு. இது உங்களது தோல்வியை மறக்கடித்து, மீண்டும் வெற்றிபெற உதவும். இத்தகைய நகைச்சுவை உணர்வு கொண்ட ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்.
• ஆண் மகனின் அடையாளம் நேர்மை. இந்த நேர்மை தான் உங்களது தரத்தை வெளிக்காட்டும் கருவி. எனவே, ஆண் என்றால் அவன் நேர்மையாக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.
• ஒவ்வொரு ஆணிடமும் ஏதேனும் மர்மம் இருக்க வேண்டும். அவனை பற்றி மேலும், மேலும் அறிந்துக் கொள்ள தங்களை அது தூண்ட வேண்டும் என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் இருக்கிறது. அதற்கென கொலை, கொள்ளை போன்ற அளவிற்கு மர்மம் இருந்துவிட கூடாது….!!
• தன்னிடம் இருப்பதை வாரி இறைத்து வள்ளல் போன்று இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்பவில்லை. குறைந்தபட்சம் மற்றவர் துயரத்தை கண்டு வருத்தம் கொள்ளும் அளவாவது உள்ளத்தில் கருணை இருக்க வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கிறார்கள்.