ரஜினியின் சமீபத்திய படங்களில் எல்லாம் அவரது அறிமுக பாடலை எழுதுவது கவிஞர் வைரமுத்துதான். ரஜினிக்கு தகுந்தாற்போல் வார்த்தைகளை அமைப்பதில் வைரமுத்து சிறந்தவர். இவர்கள் இருவருடைய கூட்டணி எப்போதும் வெற்றியையே பெற்றுள்ளது எனலாம்.
ஆனால், தற்போது ரஜினியின் அறிமுக பாடலை எழுதும் வாய்ப்பு கபிலன் வசம் சென்றுள்ளது. ரஜினி தற்போது நடித்து வரும் ‘கபாலி’ படத்தில் அவருக்கான அறிமுக பாடலை கபிலன் எழுதுகிறார்.
‘அட்டக்கத்தி’ பா.ரஞ்சித் இயக்கி வரும் இப்படம் மட்டுமில்லாது, ஏற்கெனவே ரஞ்சித் இயக்கிய ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களிலும் கபிலன் பாடல்கள் எழுதியுள்ளார்.
‘அட்டக்கத்தி’ படத்தில் கபிலன் எழுதிய ‘ஆடி போனா ஆவணி’, ‘மெட்ராஸ்’ படத்தில் எழுதிய ‘எங்க ஊரு மெட்ராஸு’, ‘ஆகாயம் தீப்பிடிச்சா’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ‘கபாலி’ படத்தின் பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.