ஆசியத் திரையுலகத்திலிருந்து ஹாலிவுட் திரையுலகம் வரை புகழ் பெற்ற ஆக்ஷன் ஹீரோ ஜாக்கி சான். இவருடன் நடிக்க பலபேர் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜாக்கி சான் நடிக்க இருக்கும் Kung Fu Yoga என்ற படத்தில் நடிக்க அனேகன் பட நாயகி அமைரா தர்துருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆங்கிலம், ஹிந்தி, மண்டரின் என மூன்று மொழிகளிலும் தயாராகும் இந்த படத்தை ஸ்டான்லி டாங் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் சோனு சூத் மற்றும் இலியானாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.