பூமியில் இருந்து 640 ஒளிஆண்டு தூரத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர்.
சூரியனைவிட 4 மடங்கு பெரியதான அந்த நட்சத்திரத்தை சிலி நாட்டின், அடகாமா பாலைவனத்தில் உள்ள ஆய்வகத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ராட்சத தொலைநோக்கி மூலம் அந்த நட்சத்திரத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது ஒழுங்கற்ற பரப்புடனும், வாயு மண்டலத்துடனும் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
விண்வெளி ரகசியங்கள
முதன் முறையாக அந்த நட்சத்திரத்தை புகைப்படம் எடுத்துள்ள விஞ்ஞானிகள், இதன் மூலம் விண்வெளி குறித்த மேலும் பல தகவல்கள் தெரிய வரும் என்று கூறியுள்ளனர்.
100000 கோடி நட்சத்திரங்கள்:
எண்ணற்ற நட்சத்திரங்களைக் கொண்டது அண்டம் ஆகும். நமது சூரியன் அடங்கிய அண்டத்துக்கு ஆகாய கங்கை என்று பெயர். ஆகாய கங்கை அண்டத்தில் சூரியன் உட்படக் குறைந்தது 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன.
நிபுணர்கள் கணக்கீடு:
நமது அண்டத்தில் மட்டும் நமது சூரியன் போன்ற நட்சத்திரங்களைச் சுற்றுகின்ற பூமி மாதிரியான கிரகங்களின் எண்ணிக்கை 1,100 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.
உயிரின வாய்ப்பு அதிகம்:
அதாவது, இவை உயிரின வாய்ப்பு கொண்டவை. சிவப்புக் குள்ளன் நட்சத்திரங்களையும் கணக்கில் கொண்டால் பூமி மாதிரி கிரகங்கள் 4,000 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.