தனுஷ் தற்போது தங்கமகன் படத்தின் ரிலிஸில் பிஸியாகவுள்ளார். இதனால், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இவர் பல ருசிகர தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
இதில் புகை பிடிக்கும் காட்சிக்கு, நான் நிஜ வாழ்வில் புகை பிடிக்க மாட்டேன், அதையே தான் என் ரசிகர்களிடம் எதிர்ப்பார்க்கிறேன். மேலும், ரவுடி என்றால் கொஞ்சமாவது அதையெல்லாம் செய்தால் தான் நம்புவார்கள் என்று கூறினார்.
மேலும், ரஜினி அப்படி ஏதும் செய்வதில்லையே, அவர் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளை விட்டே பல வருடங்கள் ஆகிவிட்டதே என கேட்க, ‘ஏங்க ரஜினி சார் வந்து நின்றாலே போதும், அவரும் நானும் ஒன்றா?’ என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்துள்ளார்.