ஹாலிவுட் பிரபல ‘மாடல்’ அழகியாகவும், நடிகையாகவும் வலம் வருபவர் ஈவாலங்கோரியா.
இவர் முதலாவதாக கூடைப்பந்து வீரர் டோனி மார்க்கரை மணந்தார். அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் அவரை விட்டு விலகி நடிகர் டைலர் கிறிஸ்டோபரை 2–வது திருமணம் செய்து கொண்டார். இதுவும் நீண்டநாள் நீடிக்கவில்லை. இப்போது தனது 3–வது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது இஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் ஈவா லங்கோரியா, ‘‘நானும் மெக்ஸிகன் டி.வி. நிறுவன அதிபர் ஜோஸ்ஆன் டனாயோ பாஸ்டனை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்’’ என்று கூறி உள்ளார். 40 வயதான ஈவா இப்போது மணந்து கொள்ளும் தொழில் அதிபருக்கு வயது 47.