விஜய்சேதுபதி நடிப்பில் முழுமையாகத் தயாராகி ஐந்துபடங்கள் உள்ளன. சீனுராமசாமி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் இடம்பொருள்ஏவல், ரஞ்சித்ஜெயக்கொடி இயக்கத்தில் மெல்லிசை, கார்த்திக்சுப்புராஜ் இயக்கியிருக்கும் இறைவி, நலன்குமாரசாமியின் காதலும்கடந்துபோகும் ஆகியனவற்றோடு அவர் காவல்துறைஅதிகாரியாக நடித்திருக்கும் சேதுபதி படமும் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.
இப்படங்கள் அடுத்தடுத்து வெளியானாலே அடுத்தஆண்டு முழுக்க அவருடைய படங்களாகத்தான் இருக்கும். இந்நிலையில் இரண்டுமாதங்களில் மொத்தமாக முடித்துவிடும் திட்டத்தோடு தர்மதுரை படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. அதற்கடுத்து அவர் நடிக்கும் படத்துக்கான வேலைகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்றனவாம்.
அருண்விஜய்யை வைத்து வாடீல் படத்தை இயக்கியிருக்கும் சிவஞானம் இயக்கும் படமொன்றில் விஜய்சேதுபதி அடுத்து நடிக்கவிருக்கிறாராம். அந்தப்படத்தின் கதையை இறுதிசெய்துவிட்டு இப்போது படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்களைத் தேர்வு செய்யும் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. விஜய்சேதுபதியின் நண்பர் கணேஷ் என்பவர் இந்தப்படத்தைத் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.