விஜய், அஜித் ரசிகர்கள் வலைதளங்களில் சண்டை போடுவதை நாம் வழக்கமாக பார்த்து வருகிறோம். ஆனால் ரசிகர்கள் சண்டை நிறுத்த இதுவரை அஜித், விஜய் எதுவும் செய்ததில்லை.
இவர்களை போல கன்னட ரசிகர்களும் தங்களது நாயகர்களுக்காக வலைதளங்களில் ரகளை செய்வது உண்டு.
சமீபத்தில் தன்னுடைய ரசிகர்கள் சண்டை போடுவதை கன்னட பிரபல நடிகர் தர்ஷன் ( இவர் விஜய்யின் போக்கிரி கன்னட ரீமேக் படத்தில் நடித்தவர் ) தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, ரசிகர்கள் இதுபோன்று நடந்து கொள்வது தனக்கு வேதனை அளிக்கிறது. இது ஆரோக்கியமானதல்ல என்று கூறியுள்ளார்.
இதுபோல் விஜய் அல்லது அஜித் முன்வந்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கூறிவருகின்றனர்.