தெலுங்கு சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழிலும் அப்படித்தான் என்றாலும், இவர் கொடுத்த ஹிட் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
கத்தி படம் மட்டுமே இவருக்கு ஹிட், ஆனால், அந்த படத்தில் இவருக்கு பெரிதாக நடிக்கும் வாய்ப்பே இல்லை. இந்நிலையில் இந்த வருடம் வந்த தங்கமகன், 10 எண்றதுக்குள்ள படமும் தோல்வியை தழுவியது.
இதனால் அடுத்து 24, வடசென்னை இந்த படங்களை நம்பி தான் சமந்தா உள்ளாராம். மேலும், இனி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளாராம்.