சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக 250 நாளைக் கடந்துள்ள அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி, நேற்று அங்கிருந்து எடுத்து அனுப்பியுள்ள புகைப்படம் நாம் இந்திய வரைபடத்தில் மட்டுமே பார்த்த இந்தியாவின் தென் எல்லையில் உள்ள ராமேஸ்வரத்தின் நீலக்கடல் அழகை ஒரு ஓவியம் போல் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது.
“The Southern tip of #India and its blue waters. #YearInSpace” என்ற கருத்துடன் நேற்று அதிகாலை 2.18 மணிக்கு ஸ்காட் தனது ட்விட்டரில் இந்த புகைப்படத்தை பதிவிட்டார். 10 ஆயிரம் லைக்குகளை கடந்து இந்தப் புகைப்படம் இணையத்தில் படு வைரலாகப் பரவி வருகிறது.
இந்த புகைப்படத்திற்கு முன்பாக தென் இந்தியாவில் எடுக்கப்பட்ட வேறு சில புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.