13 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. திரைத்துறையில் அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ இன்றும் அதே போன்று இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவரும் திரிஷா தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.
இவர் தற்போது டாட்டூ குத்துவதில் மிகவும் ஆர்வம் கொண்டு வருகிறார். முதலில் மார்பு பகுதியில் மீனின் உருவத்தை டாட்டூ குத்தினார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின்னர் கையில் ரிஷப ராசியின் அடையாளத்தை டாட்டூ குத்தினார். தற்போது முதுகு பக்கத்தின் இடது தோள் பகுதியில் சினிமா கிளாப்போர்டுடன் கூடிய கேமரா இணைந்த டாட்டூவை வரைந்திருக்கிறார். தொழில் மீது தான் வைத்திருக்கும் பக்தியை வெளிப்படுத்தவே இந்த டாட்டூவை அவர் வரைந்திருப்பதாக கூறியிருக்கிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பூலோகம்’ படத்தில் ஜெயம் ரவியின் புகைப்படத்தை உடம்பில் டாட்டூ குத்துவார். தற்போது இப்படம் வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.