சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி படம் இந்த கோடை விடுமுறைக்கு வரவிருக்கின்றது. அதேபோல் விஜய்யின் தெறி ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இப்படங்களின் மலேசியா வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. இப்படங்களை வாங்குவதில் நடந்த கடும் போட்டியில் பிரபல மலேசியா திரைப்பட வெளியீட்டு நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த இரண்டு படங்களையும் பெரும் தொகைக்கு எடுத்திருந்தாலும், சூப்பர் ஸ்டாரின் கபாலியை, தெறியை விட கொஞ்சம் அதிக தொகைக்கு எடுத்துள்ளார்களாம்.