சல்மான் கான் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’, ‘பிரேம் ரத்தன் தான் பயோ’ ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. இப்படத்தை தொடர்ந்து ‘சுல்தான்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இப்படத்தை இந்தியில் ‘மேரே பிரதர் கி துல்கான்’, ‘கன் டே’ ஆகிய படங்களை அலி அப்பாஸ் ஷாபர் இயக்குகிறார். மேலும், இப்படத்தை யாஸ் ராஜ் பிலிம்ஸ் சார்பாக ஆதித்யா சோப்ரா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
இப்படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க நடிகை தேடும் படலம் சமீபகாலமாக நடைபெற்று வந்தது. தற்போது அனுஷ்கா சர்மாவை சல்மானுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த வருடம் சொல்லிக்கொள்ளும்படியாக படங்கள் எதுவும் ஓடவில்லை. இருப்பினும், இந்த வருடம் இந்த படம் இந்தியில் தனது நிலைநிறுத்தும் என நம்புகிறார். மேலும், இப்படத்திற்கு விஷால் சேகர் இசையமைக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.