ரஜினிகாந்த் நடிப்பில் எத்தனை படங்களை வந்தாலும் அதில் ஒரே ஒரு படம் மட்டும் ரசிகர்களின் பேவரட் படமாக அமைந்து வருகிறது. சத்யா மூவிஸ் தயாரிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்க, தேவா இசையமைப்பில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன் என பலர் நடித்த பாட்ஷா படம் தான். இப்படம் இதே நாளில் 21 வருடங்களுக்கு முன் வெளியாகி இருந்தது.
சென்டிமென்ட், நகைச்சுவை, ஆக்ஷன், விறுவிறுப்பு, காதல் என அத்தனை அம்சங்களும் சரியான கலவையாக வந்திருந்தது பாட்ஷா படம்.
பாட்ஷா படம் போல் மாஸான படம் இப்போது உள்ள எந்த நடிகருக்கும் கிடைக்கவில்லை. இப்படத்திற்கு முன்பும் சரி, இப்போதும் சரி ரஜினியின் எத்தனை படங்கள் வந்தாலும் மிகப்பெரிய சாதனை படைத்த இத்திரைப்படம் எப்போதும் இளம் ரசிகர்களின் ரசனை படமாக அமைந்து வருகிறது.