இது என்ன மாயம், ரஜினிமுருகன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் ரயில், சிவகார்த்திகேயனின் புதிய படம், பாம்புசட்டை என பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், ஜீவா நடிக்கும் கவலை வேண்டாம் படத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியிருந்தார். இதற்கான போட்டோஷுட் கூட சமீபத்தில் நடந்து முடிந்தது.
ஆனால், தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை, இப்படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டுள்ளார். அடுத்தடுத்த படங்களில் இவர் தொடர்ந்து கமிட் ஆகியிருப்பதால் இந்த படத்திற்கான கால்ஷிட் தேதிகளில் கொஞ்சம் தடுமாற்றம் வரும் என்பதால் அவர் நீக்கப்பட்டார் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷிற்கு பதிலாக தற்போது ஜீவாவிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.