காயம் காரணமாக பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வலைப்பயிற்சி மேற்கொள்ளும் விடியோ வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கு முன்பு டர்ஹமில் கவுன்டி செலக்ட் XI-க்கு எதிராக 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.
இந்திய தலைவர் விராட் கோலி மற்றும் துணை தலைவர் அஜின்க்யா ரஹானே காயம் காரணமாக ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.
இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தின் 2 வது நாள் உணவு இடைவேளையில் இந்திய தலைவர் விராட் கோலி துடுப்பாட்ட பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அதன் விடியோ தற்போது வெளியாகி சமூக ஊடகங்களில் பரலாக பரவி வருகிறது.