புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக நடனமாடுவது போன்ற தோற்றத்தைக் கொடுப்பதற்கே நடனக்கலைஞர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலையில், முழுக்க முழுக்க பாதம் தரையில் படாமல் இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
போலந்து நாட்டைச் சேர்ந்த 16 வயது இளம்பெண்ணான மஜா குக்சின்ஸ்கா, பேஸ்புக்கில் தன்னை ‘பாடிபிளைட் ஆர்டிஸ்ட்’ என்றே குறிப்பிடுகிறார். காற்று சுரங்கப் போட்டி எனப்படும் (wind tunnel competition) பல்வேறு சாகசங்கள் அடங்கிய போட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், போட்டியின் ஒரு பகுதியாக செய்த நடன சாகசம்தான் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.