பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல சிற்ப கலைஞர் ஆகஸ்டு ரோடின் 1927–ம் ஆண்டு ஆணும் பெண்ணும் முத்தமிடுவது போன்ற ஒரு சிலையை உருவாக்கி இருந்தார். இதற்கு தி கிஸ் என்று பெயரிடப்பட்டு இருந்தது.
இந்த சிலை உலகப்புகழ் பெற்றதாகவும் திகழ்ந்து வந்தது. 85 செ.மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலையை பிரான்ஸ் நாட்டில் உள்ள நிறுவனம் ஒன்று ஏலத்துக்கு விட்டது. அதை அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார்.