நடிகர் | கணேஷ் வெங்கட்ராமன் |
நடிகை | ஸ்வேதா மேனன் |
இயக்குனர் | சங்கர் – சுரேஷ் |
இசை | அர்ரோல் கொரெல்லி |
ஓளிப்பதிவு | கார்த்திக் ராஜா எ |
இவ்வாறாக அந்த வீடியோவின் வெயிட் அதிகரிக்க, இதுகுறித்த தகவல் அறியும் மாநகர போலீஸ் கமிஷனர் ஒய்.ஜி.மகேந்திரன் இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு முடுக்கிவிடுகிறார்.
இதையடுத்து, இந்த குற்றப்பிரிவுக்கு சிறப்பு துணை ஆணையராக வரும் நாயகன் கணேஷ் வெங்கட்ராம், இதுகுறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டிருக்கும் போது, அந்த இணையதளத்தில் அடுத்த வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
இருந்தாலும் மீண்டும் பணிக்கு திரும்பும் உத்வேகத்தில், இந்த குற்றம் குறித்து கண்டறிய, மகேஷ் தன்னால் இயன்ற உதவியை செய்து வர அடுத்த வீடியோவில் கணேஷ் வெங்கட்ராமுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
மகேஷை காப்பாற்றுவதற்காக நாயகன் கணேஷ் வெங்கட்ராம் ஒருபுறம் போராட, அவரது முயற்சி பலிக்காமல், ஈரோடு மகேஷ்-ம் இறந்துவிடுகிறார்.
பொதுவாக போலீஸ் அல்லது ராணுவ வேடத்திலேயே அதிகளவில் நடித்திருக்கும், கணேஷ் வெங்கட்ராம், இப்படத்திலும் ஒரு போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சுகன்யா ஸ்ரீதரன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தில் அவருடைய கதாபாத்திரம் பேசும்படியாக இருக்கிறது. ஈரோடு மகேஷ் நடிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், காமெடியில் தோல்வியையே சந்தித்திருக்கிறார்.
ஷங்கர், சுரேஷ் என இரு இயக்குநர்கள் இயக்கியிருந்தும், படம் சொல்லும்படியாக பெயர் வாங்கவில்லை. இணையதளத்தின் மூலமாக நடைபெறும் கொலையை தெளிவாக காட்டியிருந்தாலும், அதற்கான திரைக்கதையை சரிவர அமைக்கவில்லை.
ஏ.கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவும், அரோல் கோரெலியின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. ஒருசில பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `இணையதளம்’ வேகமில்லை.