ரிவி தெரணவின் 12 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள லிட்டில் ஹாட் செயற்றிட்டத்திற்கு (Run for Little Hearts) வலுசேர்க்கும் வகையில் நடத்தப்படும் நடைபயணம் மற்றும் மரதன் ஓட்டப் பந்தயங்களின் கலந்து கொண்டு நீங்களும் மனிதாபிமானமே முதன்மையானது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுங்கள்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, சிறிய இதயங்களுக்கு வாழ்வை அளிக்கும், கருணை மிகு செயற்றிட்டத்தில் நீங்களும் பங்காளர்களாகுங்கள்.
ஒக்டோபர் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 க்கு உங்கள் பிள்ளைகளுடன் சுதந்திர சதுக்கத்துக்கு வருகை தாருங்கள்.
மரதன் ஓட்டப் போட்டியிலும் நடைப்பயணயத்திலும் கலந்துகொண்டு நீங்களும் எமது ‘Run for Little Hearts‘ செயற்றிட்டத்தில் பங்காளர்களாகுங்கள்.
‘மரதன் ஓட்டப் போட்டி’ இடம்பெறும் வீதிகள் – சுதந்திர சதுக்கம், சுதந்திர மாவத்தை, மெய்ட்லன்ட் இடம், பௌத்தாலோக்க மாவத்தை, டி.எஸ்.சேனாநாயக்க சந்தி. பேஸ்லைன் வீதியூடாக பொரல்லை சந்தி, வோட் பிளேஸ் ஊடாக தாமரை தடாக கலையகம், சீ.டப்ளியு.டப்ளியு.கண்ணங்கர மாவத்தை ஊடாக மீண்டும் சுதந்திர சதுக்கத்தை வந்தடையும்.
‘நடைப் பயணம்’ இடம்பெறும் வீதிகள் – சுதந்திர சதுக்கம், சுதந்திர மாவத்தை, மெய்ட்லன்ட் கிரசன்ட், ஹோட்டன் பிளேஸ், தாமரை தடாக கலையகம், சீ.டப்ளியு.டப்ளியு.கண்ணங்கர மாவத்தை ஊடாக மீண்டும் சுதந்திர சதுக்கத்தை வந்தடையும்.
லிட்டில் ஹாட் செயற்திட்டத்திற்கு நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் மிகப்பெரிய உறுதுணையாகும். உங்கள் உதவித்தொகையை பின்வரும் வங்கிக்கணக்குளில் வைப்பிலிடலாம்.
இலங்கை வங்கி – 79738633
கணக்கின் பெயர் – Little Hearts
சம்பத் வங்கி – 002930026126
கணக்கின் பெயர் – Sri Lanka College of Paediatricians
நீங்கள் லிட்டில் ஹாட் செயற்திட்டத்திற்கான உதவித்தொகையை பின்வரும் இணையதள முகவரியினூடாகவும் வழங்கலாம்.
இணையதள முகவரி – www.littlehearts.lk/donation
மேலும், Dialog மற்றும் Hutch வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றிற்கு 100 ரூபாய் வீதம் வழங்கலாம்.
மாதம் ஒன்றிற்கு 100 ரூபாயை வழங்க REG இடைவௌி LH என டைப் செய்து 77100 என்ற எண்ணுக்கு SMS செய்யவும்.
“காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”