ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ´ஷு´க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான ´ஷு´ க்களின் மதிப்பு 123 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் உலகிலேயே மிக அதிக விலை உயர்ந்த ´ஷு´ என்ற பெருமை பெற்றுள்ளது. அந்த ´ஷு´க்களில் நூற்றுக்கணக்கான வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதை ஜெட்டா துபாய் நிறுவனமும், பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளன. அதற்கு 9 மாத காலம் ஆனது.
புர்ஸ் அல் அராப் 7 நட்சத்திர ஆடம்பர ஓட்டலில் இன்று இது அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு முன்பு ´டெப்பி லிங்காம்´ ஹைஹீல்ஸ் செருப்பு விலை உயர்ந்த காலணியாக கருதப்பட்டது. அதன் மதிப்பு 110 கோடி ரூபாயாகும்.