சான்ஸே இல்ல…. இந்த நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே குடுக்கலாமே!!…. என்னம்மா நீங்க இப்படிப் பன்றீங்களேம்மா???… இந்த வீடியோவப் பார்த்தா, உங்களுக்கு இப்படியெல்லாம் சொல்லத் தோணும். காரணம், இந்த வீடியோல இருக்குற இரட்டைப் பெண் குழந்தைகளின் புத்திசாலித்தனம். பத்து வருஷம் கூத்துப்பட்டறையில பயிற்சி எடுத்த கலைஞர்களால கூட இப்படி நடிக்க முடியுமாங்குறது சந்தேகம்தா……
இந்த புத்திசாலிக் குழந்தைகளோட அம்மா ஜூடி, எல்லா நேரமும் குழந்தைங்க பக்கத்துலயே இருக்க முடியாதுங்குறதால, குழந்தைங்க இருக்குற ரூம்ல ஒரு கேமராவையும், கிச்சன்ல இருந்தாக்கூட குழந்தைகள தாலாட்டு பாடி (இங்கிலீஷ்லதா!!…) தூங்க வைக்கறதுக்காக ஒரு ஸ்பீக்கரும் செட் பண்ணியிருந்தாங்க.. (இதுவன்றோ.. தொழில்நுட்ப வளர்ச்சி).
தன்னோட குரலக் கேட்டா குழந்தைங்க 2 பேரும் என்ன பன்றாங்கன்னு பாக்கறதுக்காக ‘ஹாய் பேபீஸ்’ னு வயர்லெஸ் மைக் வழியா கொஞ்சிப் பாத்தாங்க, அவ்ளோதான், ‘அய்யய்யோ… அம்மா வந்துட்டாங்கடி…’ங்குற பதட்டத்துல அந்த குட்டி சுட்டிகள் என்ன பன்னாங்கங்கன்னு நீங்களே பாருங்க….