இயேசு கிறிஸ்து எப்படி இருப்பார்? என பொதுவான கேள்வியைக் கேட்டால் அதற்கான பதிலை அனேகமாக எல்லோருமே அறிந்திருப்பார்கள்.
மேற்கத்திய ஓவிய பாணியில் உருவகப்படுத்தப்பட்டு இருப்பதுதான் தற்போது நாம் காணும் இயேசுவின் படம். நீண்ட தலை முடி, நீளமான தாடி, முழங்காலுக்கு கீழான அங்கி (பெரும்பாலும் வெண்மை நிறம்) மற்றும் நீல நிற போர்வை போன்ற மேலாடை – இப்படிப்பட்ட ஒரு தோற்றத்தையே பரவலாக அனைவரும் கண்டு வந்திருப்பதால், அதுவே உலக மக்களின் மனங்களிலும் பதிந்து போன இயேசுவின் தோற்றமாக மாறியிருக்கிறது.
ஆனால், உண்மையிலேயே இயேசு எப்படி இருப்பார் தெரியுமா என கேட்டால், அதற்கு பதில் அந்தப் பலரிடமும் “இல்லை” என்பதாகவே இருக்கும்.