பிரபலங்கள் பலரும் தங்கள் தீபாவளி கொண்டாடும் விடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில், ´´நாங்கள் தீபாவளி கொண்டாடிய போது… உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்´´ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ருதி ஹாசன் தற்போது ´கேஜிஎஃப்´ இயக்குநரின் ´சலார்´ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 107வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தை கோபிசந்த் மல்லினேனி இயக்குகிறார்.