அல வைக்குந்தபுரமுலோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கடந்த 2 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தமன் தான் இசையமைப்பாளர்.
தமிழில் நடிகர் விஜய் படம், சிவகார்த்திகேயன் படம் என அடுத்தடுத்து ஒப்பந்தமாகி வருகிறார். இந்த நிலையில் அவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனின் 20 வது படத்துக்காக அவரை இசையமைப்பாளர் தமன் சந்தித்திருந்ததாக புகைப்படம் பகிர்ந்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இயக்குநர் அனுதீப், நடிகர் நவீன் பொலிஷெட்டி உடனிருந்தனர்.