விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் சில முக்கிய நிகழ்ச்சிகளுக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. சூப்பர் சிங்கர் முதல் பாரதி கண்ணம்மா வரை எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் உள்ளதோ அதை காட்டிலும் பல மடங்கு ரசிகர்களை கொண்டது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நடந்து வருகிறது. சுமார் 20 போட்டியாளர்கள் ஐந்தாம் சீசனில் கலந்து கொண்டனர். அவர்களின் பலர் தற்போது வெளியேறிய நிலையில் 6 பேர் மட்டுமே மீதம் உள்ளனர்.
இவர்களில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு 5 போட்டியாளர்களுடன் அடுத்த வாரத்தை நோக்கி செல்ல உள்ளது. இந்த ஐந்து பேர் தான் டாப் 5 போட்டியாளர்கள் என்று அறிவிக்கப்பட்டு கடைசி வாரத்திற்கு செல்ல உள்ளனர். எனவே தற்போது பல முனை போட்டிகள் நடந்து வருகின்றன. பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பட்ட காலங்களில் அதன் டி.ஆர்.பி பல மடங்கு உயர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து கொள்ளும். ஆனால், சில வாரங்களுக்கு முன்னர் இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி யாரும் எதிர்பாராத வண்ணம் அதன் டி.ஆர்.பி-யை இழந்தது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போக்கை திசை திருப்ப பல்வேறு போட்டிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மீண்டும் இதன் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி, சில முக்கிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர், பிக் பாஸ் வீட்டிற்குள் புகை பிடிக்கும் அறை உள்ளதை பற்றி பலர் கேள்வி எழுப்ப அது ட்ரெண்டிங் ஆனது.