நியூசிலாந்து டெஸ்ட் அணி வீரர் ரோஸ் டெய்லர் இன்று (11) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். நியூசிலாந்து – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவர் இவ்வாறு ஓய்வு பெற்றுள்ளார். இந்த போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியின் இறுதி விக்கெட்டை ரோஸ் டெய்லர் வீழ்த்தியிருந்தமை விசேடம்சமாகும். இதற்கமைய குறித்த இன்னிங்சில் அவர் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். 2007ல் அறிமுகமான டெய்லர், 112 டெஸ்டில் 7,683 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 19 சதங்களும் 35 அரை சதங்களும் அடங்கும். பங்களாதேஷ் அணியின் கடைசி விக்கெட்டை ரோஸ் டெய்லர் வீழ்த்திய வீடியோ கீழே …
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website