பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது.
இதில் ராஜு பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் தட்டி சென்றார். அவரை தொடர்ந்து பிரியங்கா மற்றும் பாவனி அடுத்தடுத்த இடங்களை பெற்றனர்.
இதனிடையே நேற்றைய நிகழ்ச்சியில் கமல் பிக் பாஸ் புதிய களம் காண இருப்பதாக கூறி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.
மேலும் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் OTT தளமான ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.